Ads Right Header

CURRENT AFFAIRS - APRIL 2020!


மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள முதல் ஆராய்ச்சி நிறுவனம் எனும் பெருமையை குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நிறுவனம் ( Sardar Vallabhbhai Patel Institute ) பெற்றுள்ளது .

மிதமிஞ்சிய அரிசியை சானிட்டைசர் தயாரிப்பதற்கான எத்தனாலாக மாற்றுவதற்கு இந்திய உணவுக் கழகத்திற்கு ( Food Corporation of India ( FCI ) ) தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழு ( National Biofuel Coordination Committee ( NBCC ) ) ஒப்புதல் வழங்கியுள்ளது .

ஹங்பன் தாதா பாலம் ' ( Hangpan Dada Bridge ) - அருணாச்சலப் பிரதேசத்தில் சுபன்சிரி ( Subansiri ) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது .

 புயல்களுக்கான பெயர் பட்டியலில் , முதன் முதலாக ' முரசு , நீர் ' என்ற இரண்டு தமிழ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன .

இந்திய பெருங்கடலில் இணைந்துள்ள வங்கக்கடல் , அரபிக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு , உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் , பெயர் சூட்டப்படுகிறது .

இந்திய பெருங்கடல் பகுதிகளை , கரைகளாக கொண்ட நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு , இந்த பெயர் சூட்டப்படுகிறது . கடந்த , 2004ல் தயாரான பெயர் பட்டியல் , இதுவரை பயன்படுத்தப்பட்டது , எட்டு நாடுகள் சார்பில் , 64 பெயர்கள் இடம் பெற்றன.

தற்போது , அனைத்து பெயர்களும் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் , தாய்லாந்து தேர்வு செய்துள்ள , அம்பான் என்ற பெயர் மட்டும் மீதம் உள்ளது.

இந்நிலையில் , புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . அதில் , ஏற்கனவே இருந்த , எட்டு நாடுகளுடன் , புதிதாக , ஐந்து வளைகுடா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன .

ஈரான் , கத்தார் , ஏமன் , சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு நாடும் தலா , 13 பெயர்கள் வழங்கியுள்ளன . அதன்படி , 139 பெயர்கள் , இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன .

இந்தியா அளித்த பெயர்களில் , முதல் முறையாக , இரண்டு தமிழ் பெயர்கள் உள்ளன . ' முரசு , நீர் ' என்ற , இரண்டு பெயர்களையும் , சென்னை வானிலை மையம் தேர்வு செய்து கொடுத்துள்ளது . மேலும் , சமஸ்கிருதம் , ஹிந்தி , வங்காள மொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன .

நடப்பு நிகழ்வுகள் 2020
 முழுமையாகக் காண

Click here to view pdf


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY