Ads Right Header

ஹரப்பா நாகரீகம் - தோற்றமும், வளர்ச்சியும்!


ஹரப்பா நாகரிகம்

சிந்துப் பள்ளத்தாக்கில் மேற்கு பஞ்சாபிலுள்ள ஹரப்பா சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சாதாரோ ஆகிய இரு இடங்களிலும்தான் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .

இவ்விரண்டு இடங்களும் தற்போது பாகிஸ்தானில் உள்ளன . இந்த அகழ்வாய்வுகளின் பயனாக ஒரு சிறந்த நாகரீகம் சிந்து வெளியில் இருந்தது கண்டறியப்பட்டது . தொடக்கத்தில் இந்த நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என வழங்கப்பட்டது .

சிந்துவெளிக்கு அப்பாலும் இந்த நாகரிகத்தின் தடங்கள் பரவியிருந்தமையால் பின்னர் இது
“ சிந்து நாகரிகம் ' என்று அழைக்கப்பட்டது .

முதலில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவுகூறும் வகையில் ' ஹரப்பா நாகரிகம் ' என்றும் இது வழங்கப்படுகிறது .

முக்கிய இடங்கள் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு :

சிந்துவிலுள்ள கோட் டிஜி , ராஜஸ்தானிலுள்ள காலிபங்கன் , பஞ்சாபில் ரூபார் , ஹரியானாவில் பினவாலி , குஜராத்திலுள்ள லோத்தல் , கர்கோடாடா , மற்றும் தோலவிரா .

பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும் . சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ . இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது .

தோற்றமும் வளர்ச்சியும் 

கடந்த எண்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளின் பயனாக ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இவை ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள பயன்படுகின்றன .

இதனை நான்கு முக்கிய நிலைகளாகப் பகுத்து அறியலாம் .

1 . ஹரப்பாவிற்கு முந்தைய நிலை ( Pre - Harappan )
2 . ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை ( Early - Harappan )
3 . ஹரப்பா பண்பாட்டின் முதிர்ந்த நிலை ( Mature - Harappan )
4 . ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை
 ( Late - Harappan )

ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம் . மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்திலுள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன .

இக்காலத்தில் , மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர் . ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலையில் மக்கள் சமவெளிகளில் பெரும் கிராமங்களை உருவாக்கி அங்கு வாழ்ந்தனர் .

 இக்காலத்தில்தான் சிந்து சமவெளியில் நகரங்கள் தோன்றி வளரத்தொடங்கின . கிராமப்புற வாழ்க்கையிலிருந்து மக்கள் நகரவாழ்க்கையையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர் . ஆம்ரி , கோட் டிஜி ஆகிய இடங்களை இந்த நிலைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் .

ஹரப்பா பண்பாட்டின் உச்சகட்டத்தில் பெரிய நகரங்கள் எழுச்சி பெற்றன . காலிபங்கன் அகழ்வாய்வுகள் அங்கிருந்த நகர அமைப்புகளையும் , நகர்ப்புறக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன .

ஹரப்பா பண்பாட்டின் இறுதிநிலையில் , அதன் சிதைவு தொடங்கியது . லோத்தல் அகழ்வாய்வுகள் இந்த நிலைக்கு தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன . லோத்தல் நகரமும் அதன் துறைமுகமும் மிகவும் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டன .

வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய தடுப்புச்சுவரை இந்நகரில் காணமுடிகிறது மெசபடோமியா இந்தியாவின் பிற பகுதிகள் ஆகியவற்றுக்கிடையிலான மிகப் பெரிய வாணிப மையமாக லோத்தல் திகழ்ந்தது .


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY