Ads Right Header

50 + 50 - இந்திய அரசியல் அமைப்பு விடைகள்!

 

1. 1969-ஆம் ஆண்டு மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசால் யாருடைய தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது அப்போதைய தமிழக அரசு?

அ. இராஜ மன்னார்

ஆ. சர்காரியா

இ. காகா கேல்கர்

ஈ. சர்தார் சுவரன் சிங்.

 

2. 1983-ஆம் ஆண்டு மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விசாரிக்க மறைந்த முன்னாள் பிரதமர், இந்திராகாந்தி அவர்கள் யாருடைய தலைமையின் கீழ் குழு ஒன்றை அமைத்தார்?

அ. இராஜ மன்னார்

ஆ. சர்காரியா

இ. காகா கேல்கர்

ஈ. சர்தார் சுவரன் சிங்.

 

3. கீழ்க்கண்டவற்றுள் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நிலவும் உறவுகள் தொடர்பாக சரியானது எது?

அ. சட்டமன்ற உறவுகள்

ஆ. நிர்வாக உறவுகள்

இ. நிதி உறவுகள்

ஈ. மேற்கண்ட அனைத்தும் சரி.

 

4. தற்போது மத்திய - மாநில அதிகாரப் பகிர்வு தொடர்பான மத்திய பட்டியலில் உள்ள துறைகள் எவ்வளவு?

அ. 100 துறைகள்

ஆ. 61 துறைகள்

இ. 52 துறைகள்

ஈ. 97 துறைகள்.

 

 

5. தற்போது மத்திய - மாநில அதிகாரப் பகிர்வு தொடர்பான மாநில பட்டியலில் உள்ள துறைகள் எவ்வளவு?

அ. 100 துறைகள்

ஆ. 61 துறைகள்

இ. 52 துறைகள்

ஈ. 97 துறைகள்.

 

6. தற்போது மத்திய - மாநில அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் எவ்வளவு?

அ. 100 துறைகள்

ஆ. 61 துறைகள்

இ. 52 துறைகள்

ஈ. 97 துறைகள்.

 

7. 1976-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் மாநிலப்பட்டியலில் இருந்து எத்தனை துறைகளை, பொதுப்பட்டியலுக்கு மாற்றியது?

அ. 10

ஆ. 5

இ. 3

ஈ. 2

 

8. 1976-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாறிய துறைகள்?

அ. கல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவுகள்

ஆ. பறவைகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு

இ. உச்ச, உயர்நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம்

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

 

9. கீழ்க்கண்ட எந்த அமைப்ப்பின் சட்டமியற்றும் அதிகாரம், இந்தியாவின் மாநிலங்களுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்?

அ. மாநில சட்டமன்றம்

ஆ. யூனியன் பிரதேச சட்டமன்றம்

இ. மத்திய நாடாளுமன்றம்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

 

10. மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறும் இந்திய அரசியலமைப்பின் அட்டவணை எது?

அ. இரண்டாவது

ஆ. மூன்றாவது

இ. ஐந்தாவது

ஈ. ஏழாவது.

 

11. கீழ்க்கண்ட எந்த பட்டியலில் உள்ள துறைகளின் மீது இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சட்டமியற்ற அதிகாரம் கொண்டுள்ளன?

அ. மத்திய பட்டியல்

ஆ. மாநில பட்டியல்

இ. யூனியன் பிரதேச பட்டியல்

ஈ. பொதுப் பட்டியல்.

 

12. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டமியற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால், எந்த அரசு இயற்றும் சட்டமேஇறுதியானது

அ. மத்திய அரசு

ஆ. மாநில அரசு

இ. யூனியன் பிரதேச அரசு

ஈ. மாவட்ட அரசு.

 

 

13. கீழ்க்கண்டவற்றுள் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான சட்டமன்ற உறவுகள்குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் எவை?

அ. சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை

ஆ. சட்டப்பிரிவு 256 முதல் 263 வரை

இ. சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை

ஈ. சட்டப்பிரிவு 352 முதல் 356 வரை.

 

14. கீழ்க்கண்டவற்றுள் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான நிர்வாக உறவுகள்குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் எவை?

அ. சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை

ஆ. சட்டப்பிரிவு 256 முதல் 263 வரை

இ. சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை

ஈ. சட்டப்பிரிவு 352 முதல் 356 வரை.

 

15. கீழ்க்கண்டவற்றுள் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான நிதிசார்ந்த உறவுகள்குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் எவை?

அ. சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை

ஆ. சட்டப்பிரிவு 256 முதல் 263 வரை

இ. சட்டப்பிரிவு 268 முதல் 293 வரை

ஈ. சட்டப்பிரிவு 352 முதல் 356 வரை.

 

16. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280-இன் கீழ் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுத எது?

அ. திட்டக் குழு

ஆ. நிதிக் குழு

இ. தேசிய வளர்சிக் குழு

ஈ. ஊழல் கண்காணிப்புக் குழு.

 

17. அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் 343 லிருந்து 351 வரையுள்ள சட்டப் பிரிவுகள் எவற்றைப் பற்றி விவரிக்கின்றன?

அ. அடிப்படை உரிமைகள்

ஆ. அடிப்படை கடமைகள்

இ. அலுவலக மொழிகள்

ஈ. அரசு நெறியுறுத்தும் கோட்பாடுகள்.

 

18. இந்தியாவில் முதன் முதலாக மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 1955

ஆ. 1985

இ. 1995

ஈ. 2005.

 

19. இந்தியாவில் முதன் முதலாக மொழிக்குழு நியமிக்கப்பட்ட மொழிக்குழுதனது அறிக்கையை எந்த ஆண்டு சமர்பித்தது?

அ. 1955

ஆ. 1956

இ. 1995

ஈ. 2005.

 

20. முதலாவது மொழிக் குழுவின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்திய

நாடாளுமன்றத்தில் எந்த ஆண்டில் இந்திய அலுவலக மொழி சட்டம்இயற்றப்பட்டது?

அ. 1943

ஆ. 1953

இ. 1963

ஈ. 1973.

 

21. 1967-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அலுவலக மொழிகள் திருத்தச் சட்டத்தின்விளைவு யாது?

அ. அலுவலக மொழியாக தமிழ் காலவரையறையின்றி தொடர அனுமதி

ஆ. அலுவலக மொழியாக சமஸ்கிருதம் காலவரையறையின்றி தொடர அனுமதி

இ. அலுவலக மொழியாக இந்தி காலவரையறையின்றி தொடர அனுமதி

ஈ. அலுவலக மொழியாக ஆங்கிலம் காலவரையறையின்றி தொடர அனுமதி.

22. இந்திய அரசியலமைப்பின் தொடக்கத்தில் 8-ஆம் அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன?

அ. 22

ஆ. 16

இ. 14

ஈ. 12.

 

23. தற்போது, இந்திய அரசியலமைப்பின் 8-ஆம் அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 22

ஆ. 16

இ. 14

ஈ. 12.

 

24. இந்தியாவில் தற்போது எத்தனை மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன?

அ. 14

ஆ. 22

இ. 8

ஈ. 6.

 

25. இந்தியாவில் முதன் முதலாக செம்மொழியாக அறிவிக்கபட்ட மொழி எது?

அ. சமஸ்கிருதம்

ஆ. தமிழ்

இ. தெலுங்கு

ஈ. கன்னடம்.

 

26. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளவற்றை தேர்தெடு:

I. தமிழ் - 2004 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

II. சமஸ்கிருதம் - 2005 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

III. தெலுங்கு - 2008 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

IV. கன்னடம் - 2008 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

V. மலையாளம் - 2013 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

VI. ஒடியா - 2014 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

அ. I மட்டுமே சரி

ஆ. I,III,V மட்டுமே சரி

இ. II,IV,VI மட்டுமே சரி

ஈ. I,II,III,IV,V,VI அனைத்தும் சரி.

 

27. போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, உள்நாட்டில் ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற உடனடி ஆபத்து மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி தேசிய அளவிலான அவசரநிலையை அறிவிக்கலாம்?

அ. சட்டப்பிரிவு 352

ஆ. சட்டப்பிரிவு 356

இ. சட்டப்பிரிவு 360

ஈ. சட்டப்பிரிவு 370.

 

28. இந்தியாவில் தேசிய அளவிலான வெளிப்புற மற்றும் உள்நாட்டு அவசரநிலைகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது / எவை?

அ. 1962

ஆ. 1971

இ. 1975

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

29. இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்தில், அசாதாரண சூழல் ஏற்படும்பொழுது இந்திய அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப அம்மாநில ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, இந்திய குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அவசர நிலையை அறிவிக்கலாம்?

அ. சட்டப்பிரிவு 352

ஆ. சட்டப்பிரிவு 356

இ. சட்டப்பிரிவு 360

ஈ. சட்டப்பிரிவு 370.

 

30. கீழ்க்கண்ட எந்த ஒரு அமைப்பால் மட்டுமே இந்திய அரசியலமைப்பில்

சட்டத்திருத்தத்தை கொண்டுவர முடியும்?

அ. இந்திய உச்சநீதிமன்றம்

ஆ. இந்திய பாராளுமன்றம்

இ. மாநில சட்டமன்றம்

ஈ. தேசிய வளர்சிக் குழு.

 

31. ஜனவரி 14, 2019 வரை இந்திய அரசிலயலமைப்பில் எத்தனை; சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

அ. 123

ஆ. 113

இ. 103

ஈ. 93.

 

32. 1976-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 42-வது

சட்டத்திருத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா"

ஆ. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல்

இ. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சம்

ஈ. சிறிய அரசியலமைப்பு”.

 

33. இந்திய அரசியலமைப்பின் பகுதி - V இல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் எவற்றைப் பற்றி கூறுகிறது?

அ. மாநில அரசின் நிர்வாகம்

ஆ. உச்சநீதிமன்ற நிர்வாகம்

இ. உயர்நீதிமன்ற நிர்வாகம்

ஈ. மத்திய அரசின் நிர்வாகம்.

 

 

34. மத்திய அரசின் அங்கங்கள் எது /எவை?

அ. நிர்வாகம்

ஆ. சட்டமன்றம்

இ. நீதித்துறை

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

35. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் யார்?

அ. குடியரசுத் தலைவர்

ஆ. துணைக் குடியரசுத் தலைவர்

இ. பிரதமர்

ஈ. முதலமைச்சர்.

 

36. கீழ்க்கண்ட்வற்றுள் எது இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் எது /எவை?

அ. புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்

ஆ. ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம்

இ. சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் ((The Retreat Building)

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

37. கீழ்க்கண்ட்வர்களுல் பிரதம அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை நியமனம் செய்பவர் யார்?

அ. குடியரசுத் தலைவர்

ஆ. துணைக் குடியரசுத் தலைவர்

இ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ. தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர்.

 

38. இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படி, பொதுத் தேர்தலுக்குப் பின்னர்

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரையும், ஒவ்வொரு ஆண்டும்

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தையும் தனது உரையுடன் துவக்கி வைப்பபவர் யார்?

அ. மக்களவை சபாநாயகர்

ஆ. மக்களவை துணை சபாநாயகர்

அ. குடியரசுத் தலைவர்

ஆ. துணைக் குடியரசுத் தலைவர்

 

39. கீழ்க்கண்ட எந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது?

அ. நிதி மசோதா

ஆ. பண மசோதா

இ. மேற்கண்ட இரண்டும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

 

40. கீழ்க்கண்டவர்களுல் மக்களவையின் ஐந்து ஆண்டு காலம் முடியும் முன்னரே அதனைக்கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

அ. மக்களவை சபாநாயகர்

ஆ. மக்களவை துணை சபாநாயகர்

இ. குடியரசுத் தலைவர்

ஈ. துணைக் குடியரசுத் தலைவர்

 

41. குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட யார் குடியரசுத் தலைவரின் பணிகளைச்செயலாற்றுவார்?

அ. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

ஆ. இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர்

இ. இந்திய தலைமை அரசு வழக்குரைஞர்

ஈ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

 

42. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. வெஸ்ட்மினிஸ்டர் முறை

ஆ. கிரம்ளின் முறை

இ. செனட் ஹவுஸ் முறை

ஈ. வெள்ளை மாளிகை முறை.

 

43. கீழ்க்கண்டவர்களுல் இந்திய நாட்டின் உண்மையான தலைவராகவும் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுபவர் யார்?

அ. குடியரசுத் தலைவர்

ஆ. துணைக் குடியரசுத் தலைவர்

இ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ. இந்தியப் பிரதம அமைச்சர்.

 

44. நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் யாருடைய ஆலோசனையின் படி குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையை நியமிக்கிறார்?

அ. குடியரசுத் தலைவர்

ஆ. துணைக் குடியரசுத் தலைவர்

இ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ. இந்தியப் பிரதம அமைச்சர்.

 

45. கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், திருத்தங்கள் கொண்டுவர ஒரு கருவியாக செயல்படுவது எது?

அ. இந்திய திட்ட ஆணையம்.

ஆ. இந்திய உச்சநீதிமன்றம்

இ. மத்திய காபினெட் அமைச்சரவைக் குழு

ஈ. இந்திய தேர்தல் ஆணையம்

 

46. இந்தியப் பாராளுமன்றத்தில் நிதி மசோதாவானது, எங்கிருந்து தொடங்குகிறது?

அ. மாநிலங்களவை

ஆ. இணை அமைச்சரவை

இ. இராஜாங்க அமைச்சரவை

ஈ. காபினெட் அமைச்சரவை.

 

 

 

 

47. காபினெட் அல்லது இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் உதவி புரிபவர்கள்?

அ. மத்திய அரசு அலுவலர்கள்

ஆ. மாநில அரசு அலுவலர்கள்

இ. மத்திய இணை அமைச்சர்கள்

ஈ. மேற்கண்ட யாருமில்லை.

 

48. பாராளுமன்ற மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

அ. 545 உறுப்பினர்கள்

ஆ. 250 உறுப்பினர்கள்

இ. 238 உறுப்பினர்கள்

ஈ. 12 உறுப்பினர்கள்

 

49. பாராளுமன்ற மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அனுபவம் கொண்டமைக்காக குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?

அ. 545 உறுப்பினர்கள்

ஆ. 250 உறுப்பினர்கள்

இ. 238 உறுப்பினர்கள்

ஈ. 12 உறுப்பினர்கள்

 

50. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சட்டமன்றங்களைக் கொண்டுள்ள யூனியன் பிரதேசங்கள் எது / எவை?

அ. தில்லி

ஆ. புதுச்சேரி

இ. ஜம்மு காஷ்மீர்

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

51. பஞ்சாயத்து அமைப்புகளின் எத்தனை பணிகள் இந்திய அரசியலமைப்பின் 73-வது சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

அ. 9 பணிகள்

ஆ. 19 பணிகள்

இ. 29 பணிகள்

ஈ. 39 பணிகள்.

 

52. இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்) எந்த ஆண்டு 3-வது அகில இந்திய பணியாக நிறுவப்பட்டது?

அ. 1963

ஆ. 1964

இ. 1965

ஈ. 1966.

 

53. இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகராக செயல்படுபவர் யார்?

அ. உச்சநீதிமன்ற நீதிபதி

ஆ. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இ. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.

 

54. கீழ்க்கண்டவற்றுள் 1902-ஆம் காவல்துறையின் நிர்வாக செயல்பாடுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு எது?

அ. ஜேம்ஸ் குழு

ஆ. வில்லியம்ஸ் குழு

இ. பிரேசர் குழு

ஈ. சைமன் குழு.

 

55. இந்திய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுத்தொடர் நடைப்பெற்ற ஆண்டு?

அ. 1960

ஆ. 1963

இ. 1965

ஈ. 1967.

 

56. முதல் லோக் ஆயுக்தா நடைப்பெற்ற நகரம்?

அ. நொய்டா

ஆ. உனா

இ. மங்களூரு

ஈ. விசாகப்பட்டிணம்.

 

57. 'இந்திய அரசியலமைப்பு முதல் மற்றும் முதன்மையான சமூக ஆவணமாகும்" இது யாருடைய கூற்று?

அ. மோதிலால் நேரு

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. கிரன்வில் அஸ்டின்

ஈ. மௌண்ட் பேட்டன் பிரபு.

 

58. இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஆண்டிலிருந்து 3 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மாறியது?

அ. 1990

ஆ. 1991

இ. 1992

ஈ. 1993.

 

59. மத்திய அரசின் தலைமைச் செயலகம் (கேபினட்) உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ. 1950

ஆ. 1955

இ. 1947

ஈ. 1985.

 

60. 'லோக்பால்" என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

அ. மோதிலால் நேரு

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. லக்ஷ்மி மால் சிங்வி

ஈ. சித்தரஞ்சன் தாஸ்.

 

61. ஊழல் புரிந்த அரசு ஊழியரை பணியிலிருந்து நீக்கம் செய்ய இந்திய அரசியலமைப்பு விதி 311-ல் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்த குழு?

அ. ஜேம்ஸ் குழு

ஆ. வில்லியம்ஸ் குழு

இ. பி.சி.ஹோட்டா குழு

ஈ. சைமன் குழு.

 

62. 'இந்திய உச்சநீதிமன்றம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள உச்சநீதிமன்றங்களை விடவும் அதிக அதிகாரம் பெற்ற அமைப்பு" இது யாருடைய கூற்று?

அ. மோதிலால் நேரு

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. லக்ஷ்மி மால் சிங்வி

ஈ. அல்லாடி கிருஷ்ணசாமி.

 

63. இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் கீழ்க்கண்ட யாருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர் ஆவார்?

அ. இந்திய குடியரசுத்தலைவர்

ஆ. இந்தியப் பிரதமர்

இ. நிதி ஆயோக்

ஈ. இந்திய பாராளுமன்றம்.

 

64. இந்தியாவில் முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடைப்பெற்ற ஆண்டு?

அ. 1974

ஆ. 1955

இ. 1947

ஈ. 1985.

65. கீழ்க்கண்டவற்றில் சமுதாய வளர்ச்சி திட்டங்களில் மக்களின் பங்களிப்பை பரிந்துரைத்த குழு?

அ. ஜேம்ஸ் குழு

ஆ. வில்லியம்ஸ் குழு

இ. பல்வந்தராய் மேத்தா குழு

ஈ. சைமன் குழு.

 

66. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட ஆண்டு?

அ. 1950

ஆ. 1975

இ. 1990

ஈ. 2010.

 

67. இந்திய அரசியலமைப்பின் 124-வது சட்டத் திருத்தத்தின் மூலம் எந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது?

அ. பழங்குடி வகுப்பினர்

ஆ. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

இ. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

ஈ. பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினர்.

 

68. இந்தியாவில் தேசிய வெள்ள ஆய்வு மையம் அமைக்கப்பட்ட ஆண்டு?

அ. 1970

ஆ. 1973

இ. 1976

ஈ. 1979.

 

69. இந்திய அணு சக்தி கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ. 1948

ஆ. 1973

இ. 1997

ஈ. 1963.

 

70. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

அ. 1948

ஆ. 1951

இ. 1997

ஈ. 1963.

 

71.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் இந்திய அரசியலமைப்பு விதி?

அ. விதி - 148

ஆ. விதி - 123

இ. விதி - 268

ஈ. விதி - 367.

 

72. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த விதி மாநில சட்டமன்றம் பற்றி குறிப்பிடுகிறது?

அ. விதி - 148

ஆ. விதி - 169

இ. விதி - 268

ஈ. விதி - 367.

 

73. இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலம் எது?

அ. மதராஸ் மாகாணம்

ஆ. ஆந்திரா

இ. கர்நாடகா

ஈ. கேரளா.

 

74. இந்திய அரசியலமைப்பின் பகுதி - 12 கீழ்க்கண்ட எதைப் பற்றி குறிப்பிடுகிறது?

அ. மத்திய - மாநில அரசுகளின் நிர்வாக உறவுகள்

ஆ. மத்திய - மாநில அரசுகளின் நீதித்துறை உறவுகள்

இ. மத்திய - மாநில அரசுகளின் நிதி உறவுகள்

ஈ. மத்திய - மாநில அரசுகளின் சட்டமன்ற உறவுகள்.

 

75. பொது கணக்கு குழுவின் அறிக்கை எங்கு சமர்பிக்கப்படுகிறது?

அ. பிரதமர் அலுவலகம்

ஆ. குடியரசுத் தலைவர் இல்லம்

இ. நிதி ஆயோக்

ஈ. மக்களவை.

 

76. கீழ்க்கண்டவர்களில் இந்தியப் பாராளுமன்றத்தில் பிரதமராகவும் பின்பு எதிர்க் கட்சித்தலைவராகவும் பதவி வகித்தவர் யார்?

அ. மன்மோகன் சிங்

ஆ. நரசிம்ம ராவ்

இ. இராஜிவ் காந்தி

ஈ. வாஜ்பாய்.

 

77. ஜனநாயகம் உருவாகிய இடமாக கருதப்படுகிறது?

அ. சீனம்

ஆ. இத்தாலி

இ. கிரேக்கம்

ஈ. அமெரிக்கா.

 

78. கீழ்க்கண்டவர்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக

செயல்படுபவர் யார்?

அ. இந்திய குடியரசுத் தலைவர்

ஆ. இந்தியப் பிரதமர்

இ. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஈ. மக்களவை சபாநாயகர்.

 

79. கீழ்க்கண்டவற்றில் இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் எவ்வாறு

வகுக்கப்பட்டுள்ளன?

அ. திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்கள்

ஆ. சாதாரண மற்றும் அவசர செலவினங்கள்

இ. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு செலவினங்கள்

ஈ. முதலீடு மற்றும் லாபகர செலவிங்கள்.

 

80. சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை என்ன?

அ. ஒரு லட்சம்

ஆ. பத்து லட்சம்

இ. ஐம்பது லட்சம்

ஈ. ஒரு கோடி.

 

81. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி மாநில அரசாங்கம் பற்றி குறிப்பிடுகிறது?

அ. பகுதி - 3

ஆ. பகுதி - 4

இ. பகுதி - 5

ஈ. பகுதி - 6.

 

82. இந்திய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

அ. 1953

ஆ. 1954

இ. 1955

ஈ. 1956.

 

83. கீழ்க்கண்டவற்றில் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஊதியம் பெறுபவர் ஃ பெறுபவர்கள் யார்?

அ. இந்தியக் குடியரசுத்தலைவர்

ஆ. உச்சநீதிமன்ற நீதிபதிகள்

இ. இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்

ஈ. மேற்கண்ட அனைவரும்.

 

84. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு?

அ. 1973

ஆ. 1976

இ. 1978

ஈ. 1980.

 

85. இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளரின் ஓய்வு பெறும் வயது என்ன?

அ. 70

ஆ. 65

இ. 62

ஈ. 60.

 

86. கூற்று - 1: மாநில அளவில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமை தேர்தல் அதிகாரி.

கூற்று - 2: மாநில தலைமை தேர்தல் அதிகாரி இந்திய குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

அ. கூற்று - 1 மட்டுமே சரி

ஆ. கூற்று - 2 மட்டுமே சரி

இ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே சரி

ஈ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே தவறு.

 

87. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை துவக்கப்பட்ட ஆண்டு?

அ. 2001

ஆ. 2002

இ. 2003

ஈ. 2004.

 

 88. ஓர் அரசாங்கத்தின் மூன்றாவது மற்றும் முக்கிய அங்கமாக கருதப்படுவது?

அ. நிர்வாகத்துறை

ஆ. செயலாட்சிக் குழு

இ. வருவாய் துறை

ஈ. நீதித்துறை.

 

 

89. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி பஞ்சாயத்து பற்றி குறிப்பிடுகிறது?

அ. பகுதி - 3

ஆ. பகுதி - 4

இ. பகுதி - 6

ஈ. பகுதி - 9.

 

90. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?

அ. 26 ஜனவரி 1950

ஆ. 26 ஜூலை 1950

இ. 26 ஜனவரி 1957

ஈ. 26 ஜூலை 1957.

 

91. இந்திய பாராளுமன்றத்தில் நிர்வாக தீர்ப்பாய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

அ. 1955

ஆ. 1975

ஈ. 1995.

இ. 1985

 

92. முதல் லோக் அதாலத் நடைப்பெற்ற ஆண்டு?

அ. 1956

ஆ. 1976

இ. 1986

ஈ. 1996.

 

93. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முதன் முதலில் இயற்றிய நாடு?

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. ஜெர்மனி

ஈ. ஸ்வீடன்.

 

94. சமீபத்தில் அரசியல் கட்சிகளால் பதவி நீக்கம் (ஐஅிநயஉாநஅநவெ) செய்யப்பட பரிந்துரை செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்?

அ. தீபக் மிஸ்ரா

ஆ. ரஞ்சன் கொகாய்

இ. பி.வி.ரமனா

ஈ. அதுல்ய மிஸ்ரா.

 

95. 24, ஏப்ரல் 2021-ஆம் தேதியின் படி இந்தியாவின் 48-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் யார்?

அ. தீபக் மிஸ்ரா

ஆ. ரஞ்சன் கொகாய்

இ. பி.வி.ரமனா

ஈ. அதுல்ய மிஸ்ரா.

 

96. 'தகவல் அரியும் உரிமை" என்ற ஆவணம் முதன் முதலாக எதிலிருந்து வந்தது?

அ. சர்வதேச நிதியம்

ஆ. உலக வங்கி

இ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி.

 

97. வீரப்ப மொய்லி தலைமையிலான ஆணையம் கீழ்க்கண்ட எதோடு தொடர்புடையது?

அ. தேர்தல்

ஆ. நிர்வாக சீர்திருத்தம்

இ. பணியாளர்கள் நலன்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

 

98. கட்சித் தாவல் தடைச் சட்டம் இயற்றப்பட காரணமாய் இருந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் எது?

அ. 32-வது சட்டத் திருத்தம்

ஆ. 46-வது சட்டத் திருத்தம்

இ. 52-வது சட்டத் திருத்தம்

ஈ. 64-வது சட்டத் திருத்தம்.

 

99. 'இந்திய அரசியலமைப்புச் சட்டமானது பிற நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து சூறையாடப்பட்டது" என குறிப்பிட்டவர் யார்?

அ. மோதிலால் நேரு

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. அம்பேத்கர்

ஈ. அல்லாடி கிருஷ்ணசாமி.

 

100. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி அவசர நிலை சட்டங்களைப் பற்றி

குறிப்பிடுகிறது?

அ. பகுதி - 13

ஆ. பகுதி - 14

இ. பகுதி - 16

ஈ. பகுதி - 18.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY